TamilNatpu


9.17.2010

குறளும் பொருளும் பகுதி-2

குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

பொருள்:

 இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.



குறள் 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள்:

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து அவனுக்கு தீங்கு வருங்காலத்தில் அந்த தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.




குறள் 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


பொருள்

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதை சரி செய்ய உதவுகின்றனவோ அதைப்போல் நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வது நட்பின் இலக்கணமாகும்.


குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

பொருள்

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணை நின்று நண்பனைத் தாங்குவதுதான் நட்பின் சிறப்பாகும்.

குறள் 800

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்

நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்;யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக