TamilNatpu


12.30.2010

கட்டுமரமாக மிதந்ததற்கே இப்படி என்றால் கப்பலில் மிதந்தால்

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.

*1944
ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.
இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra
51. Sun Tv Network- 6 Tamil channels, 6 Telugu Channels, 6 Kannada Channels and 2 Malayalam channels, FM Radio Stations in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, Sun DTH, Newspapers- Dinakaran, Tamil Murasu, Mursoli, Raising Sun etc etc. Weekly magazines- Kungumam, Mutharam, Vannathirai, Kunguma Chimizh
52. Kalaignar Tv Network- 7 Channels ( including national and international)
53. Film Production & Distribution- Sun Pictures, Red Giant Movies, Cloud Nine Entertainment

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்.


இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். உண்மையில் எவ்வளவோ எனக்கு சத்தியமாக தெரியாது.இது உண்மையான தகவலா அதுவும் எனக்கு தெரியாது. ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு. இது ஸ்பெக்ட்ரமுக்கு முன்னாலா அல்லது பின்னாலா.

இத்துடன் ஒரு குறுந்தகவலும் வந்தது. அதை பதியலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.


பணத்தை கொண்டு வந்தவுடன் ஆ.ராசாவிடம் கருணாநிதி கூறியது.
------ உனக்கு  மணி எனக்கு. பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
கோடிட்ட இடத்தை நிரப்புக. 

12.27.2010

தமிழேன்டா

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில்வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில்மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் பேசிய விஜயகுமார் நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவுஅடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேறசிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!