TamilNatpu


9.28.2010

தமிழ் நட்பு கவிதை

பழகும் முன் “ தனிமை

பழகிய பின் “ இனிமை ”

பிரிவு என்பதோ “ கொடுமை

பிரிந்தால்தான் தெரியும் “ நட்பின் அருமை


நட்பிற்கு என்றும் முடிவில்லை.


நிச்சயமாக எனது கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது.

கவிதையை எழுதியவர் யார் என தெரியவில்லை.

9.20.2010

வெள்ளித்திரையில் நட்பு பாடல்கள் - எனக்கு பிடித்தவை பகுதி-2

படம்         - தளபதி
வருடம்   - 1991
இசை       - இளையராஜா
பாடகர்    - எஸ்.பி.பாலசுப்ரமணியன்


காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை விட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு
கச்சை கட்டு ஆடத்தான்

எல்லோரும் மொத்தத்திலே சந்தோசம் சொர்க்கத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டேய்

பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டேய்

ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூளம் பத்த வச்சு காயலாம்

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கின்ற நாள்தான் ஹோய்

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்னா
உறவுக்கெல்லாம் கவலைப் பட்ட ஜென்மம் நானில்லை

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை

உள்ள மட்டும் தானே என் உசிரைக்கூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான்.


எம்பி 3 சுட்டி : http://movies-tv-songs.com/mp3/2007/Dhalapathy/Kaattukkuyilu.MP3 
ஒளிப்பட சுட்டி : http://www.youtube.com/watch?v=5DlqbKEwtU8&feature=player_embedded

வெள்ளித்திரையில் நட்பு பாடல்கள் - எனக்கு பிடித்தவை பகுதி-1

படம்         -  உயர்ந்த மனிதன்
வருடம்   - 1968
இசை       - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகர்    - டி.எம்.எஸ்


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
 அது ஏன் ஏன் நண்பனே

(பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிரவேறு எதைக் கண்டோம்)

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

(பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்ததும் கவலையும் வந்தது)

பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும்
மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற
அமைதி எங்கே அமைதி எங்கே

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்.


எம்.பி 3 சுட்டி       :  http://www.oosai.com/tamilsongs/uyarntha_manithan_songs.cfm

ஒளிப்பட சுட்டி :  http://videos.desishock.net/index.php?module=item&action=show_item_full&itemid=159204&itemurl=aHR0cDovL3lvdXR1YmUuY29tLz92PVVpLThIbHF6YUx3

9.17.2010

குறளும் பொருளும் பகுதி-2

குறள் 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

பொருள்:

 இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.



குறள் 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள்:

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து அவனுக்கு தீங்கு வருங்காலத்தில் அந்த தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.




குறள் 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


பொருள்

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதை சரி செய்ய உதவுகின்றனவோ அதைப்போல் நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வது நட்பின் இலக்கணமாகும்.


குறள் 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

பொருள்

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணை நின்று நண்பனைத் தாங்குவதுதான் நட்பின் சிறப்பாகும்.

குறள் 800

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

பொருள்

நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்;யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

குறளும் பொருளும்

 நட்பு


குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

பொருள்:

 நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


குறள் 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

பொருள்:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலாவாகத் தொடங்கி முழு நிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


குறள் 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

குறள் 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

பொருள்:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துக்கூறி திருத்துவதற்காகும்.


குறள் 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:

இருவருக்கிடையே நட்பு வருவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை; இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.




9.14.2010

நட்பு

"இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை

மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்கு சொன்னது
திருக்குறள்


திருக்குறள் - மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அரிய புதையல்.
நம்மில் எத்தனை பேர் அதை உணர்கிறோம். திருக்குறளில் இல்லாதது வேறு எந்த ஒரு நூலிலும் கிடையாது.

அத்தகைய திருக்குறளில் இருந்து இதோ  “ நட்பு”  அதிகாரம்





செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
781

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
782

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
783

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
784

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
785

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
786

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
787

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
788

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
789

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
790





அனைத்து குறளிற்கான பொருள் அடுத்த பதிவில்

Tamil Natpu SMS

Tamil Natpu SMS

FRIEND is one who:


Finds you in a
Rush of people
Inspires you to do something in life and catch your
Emotions &
Never leaves you till
Death.