TamilNatpu


1.20.2011

படித்ததில் பிடித்தது - செல்போன் டவர் உஷார்....


சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல... நீங்களும்தான்!


இலையுதிர் காலத்தில் மரங்களில் இருந்து இலைகள் விழுவதை ஒரு முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொண்டு, அதையடுத்து வரவிருக்கும் குளிர் காலத்துக்கு தேவையான உணவுகளை சேமித்து வைத்துக் கொள்வார்கள் அப்பகுதி மக்கள்.

மனிதர்கள் சரி... விலங்குகள்?

அவையெல்லாம் நம்மைவிட புத்திசாலித்தனமானவை என்பதுதான் ஆச்சர்யமான பதில்!

உதாரணமாக... மிருகங்களும், பிராணிகளும், பூச்சிகளும் குளிர்காலத்தை எதிர்கொள்ள இடப்பெயர்ச்சி செய்கின்றன. இடப்பெயர்ச்சி என்றால், 'இங்கே இருந்து அங்கே...’ என்ற கதையல்ல.

கடல் கடந்து, கண்டம் கடந்து செல்கின்றன; யுகம் யுகமாக தங்கள் மூதாதையர்கள் எந்த இடத்துக்குப் போனார்களோ, அதே இடத்துக்கு இவை ஆண்டுதோறும் செல்கின்றன.


வேடந்தாங்கல், கூடங்குளம் என்று தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆண்டுதோறும் 'விசிட்’ செய்யும் வெளிநாட்டுப் பறவைகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே!

அவையெல்லாம் எதை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டர் கடல் கடந்து வந்து தங்கள் இலக்கை சரியாக அடைகின்றன? மனிதனுக்கு மாபெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வி இது.

 வானத்தில் இருக்கும் சூரியனின் நிலை, நட்சத்திரங்களின் நிலை, கடலில் விழுகின்ற தங்களின் நிழல்... இவை எல்லாவற்றையும் ஆதாரமாக வைத்தே இந்த அதிசயத்தை அவை நிகழ்த்துவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆனால், 'இவை மட்டும் காரணமல்ல... பூமியின் காந்த அலைகளையும் பறவைகள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்கின்றன’ என்பது இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது!
எப்படி இது சாத்தியம்?!

அவற்றின் ஐம்புலன்கள்தான் இந்த நுணுக்கங்களை எல்லாம் அவற்றுக்குச் சாத்தியப்படுத்துகின்றன. சொல்லப் போனால், மனிதர்களைவிட விலங்குகள்தான் தங்களின் புலன்களை அதிகமாக, அற்புதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

 உதாரணமாக, திக்கு திசை தெரியாத கடலில் பயணிக்கும்போது எது வடக்கு, எது மேற்கு என்பதை கண்டறிய உதவும் 'காம்பஸ்’ கருவி, பூமியின் காந்த மண்டலத்தை ஆதரமாக வைத்தே இயங்குகிறது என்பது நாம் அறிந்ததே.

கடல் வாழும் ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், தரையிலும் தண்ணீரிலும் வாழும் தவளைகள், மலர்களில் வசிக்கும் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், ஆகாயத்தில் பறக்கும் பறவைகள், இருட்டில் படபடக்கும் வெளவால்கள், பூமிக்கு அடியில் வாழும் எலிகள்... ஏன், கொசு மற்றும் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு சிறியதாக இருக்கும் பாக்டீரியாக்கள் என்று பல உயிரினங்களின் உடம்பிலும் காந்த மண்டலத்தை ஆதாரமாக வைத்து திசைகளைக் கண்டறிய உதவும் 'காம்பஸ்’ மாதிரியான அவயம் இருப்பதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.


'உயிரினங்களின் உடம்பில் காம்ப்ஸா..?’ என்று ஆச்சர்யப்படாதீர்கள். ஆம்... இந்த உயிரினங் களின் நரம்பு மண் டலத்தில் காந்த துகள்கள் கலந்திருக்கின்றன.


எண்பது ஆண்டுகள் வாழக்கூடிய 'ஆலிவ் ரிட்லி’ ஆமைகள், ஒரிஸ்ஸா மாநில கடற்கரையில் பிறந்தாலும், பசிஃபிக் சமுத்திரத்தின் கரை வரை நீந்திச் செல்லும்.

சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து, தான் பிறந்த அதே கடற்கரைக்கு வந்து முட்டை யிடும். இந்த ஆமைகளை ஒரு பெரிய ஏரியில் விட்டு, அந்த ஏரியில் சில உபகரணங்களைப் பயன்படுத்தி செயற்கையாக காந்த அலைகளை உருவாக்கினார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 இதனால் குழம்பிப் போன ஆமைகள், செயற்கையான காந்த அலை ஏற்படுத்திய அதிர்வைப் பின்பற்றி தங்களின் பயணத்தை மேற்கொண்டன. இதை வைத்தே, காந்த அலைகளை உணரும் சக்தி பிராணிகளுக்கும் உண்டு என்பதை கண்டறிந்தனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம், 1983-ம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை கவனிக்கத் தக்கது.

 அது -
'இடப்பெயற்சி செய்யும் பறவைகளைப் போலவே, மனிதர்களின் உடம்பிலும்... குறிப்பாக, மூக்கு எலும்பு களின் இடுக்கில் காந்த சக்தி இருக்கிறது. ஆனால், பறவைகள் அளவுக்கு வீரியமிக்கதாக இல்லை.'
இப்போதெல்லாம் மின்சாரக் கம்பிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், செல்போன்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் கதிரலைகளை விலங்கின் உடலில் இருக்கும் காந்த சக்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்தச் செய்தியோடு இன்னொரு செய்தியையும் இணைத்துப் பார்த்தால்... நாம் எதிர் நோக்கி வரும் ஆபத்து புரியும்.

செல்போன் கோபுரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதை கவலையோடு நோக்க ஆரம்பித்துள்ளனர் பறவை ஆர்வலர்கள்.

குருவிகளுக்காக வேதனைப்படாவிட்டாலும், அதே காந்த சக்தியைத் தானும் பெற்றுள்ள மனிதன், தன்னை எப்படி இந்த கதிரலைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் போகிறான் என்ற கேள்விக்காவது விடை காண முயலட்டும்!

மேனகா காந்தி


 நன்றி அவள் விகடன்.

1.19.2011

நேயர் விருப்பம் - கண்மணி நீ வர காத்திருந்தேன்

படம்                               : தென்றலே என்னைத் தொடு
வருடம்                         : 1985
பாடலசிரியர்              :  வைரமுத்து
இசை                             : இளையராஜா
பாடியவர்கள்             : கே,ஜே,யேசுதாஸ், உமா ரமணன்





கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே
அந்திபகல் கன்னிமயில் உன்னருகே

கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

நீலம் பூத்த ஜால பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

நீலம் பூத்த ஜால பார்வை மானா மீனா

நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

கள்ளிருக்கும்

பூவிது, பூவிது

கையணைக்கும்

நாளிது, நாளிது

பொன்னென மேனியும்

மின்னிட மின்னிட

மெல்லிய நூலிடை

பின்னிட பின்னிட

வாடையில் வாடிய

ஆடையில் மூடிய

தேன்

  நான்


கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்


கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே

பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்


ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேருக்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேருக்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா

பெண் மயங்கும்

நீ தொட நீ தொட

கண் மயங்கும்

நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்

பொங்கிட பொங்கிட

அங்கங்கள் யாவிலும்

தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட

தோகையில் ஏந்திட

யார்

 ம் ம் ம் ம் ம்
கண்ண்னே நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மதன் நாடகமே

அந்திபகல் கன்னிமயில் உன்னருகே


கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

1.17.2011

வெள்ளித்திரையில் நட்பு பாடல்கள் - எனக்கு பிடித்தவை பகுதி-3

படம்                         :  பாண்டவர் பூமி
வருடம்                   :  2001
பாடல்                      : சிநேகன்
இசை                        : பரத்வாஜ்
பாடியவர்கள்        : யோகேந்திரன்,சித்ரா சிவராமன்


தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
ஒன்ன நான் புரிஞ்சிக்கனும்
ஒன்ணொன்னா தெரிஞ்சிக்கனும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா
காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியைக் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறியபின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறொமே காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
 நட்பு மாறுமா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா

நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலே காதலைச் சொல்லுமடி
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்துபோன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்

ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
 ஆங் இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும்
 களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
 கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
 நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கனும்
 ஒன்ணொன்னா தெரிஞ்சிக்கனும்

ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹுஹூஹூம்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
 ம்ஹும் ம்ஹுஹூஹூம்

1.12.2011

அச்சம் தவிர்

அச்சமே கீழ்மக்களின் ஆசாரம்.

ஒழுக்கம் தவறாதவன் எதன் பொருட்டும்,எவர் பொருட்டும்
அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அச்சப்படுதல் குறித்து ஓர் அற்புதமான ஈசாப் கதை.

ஒரு காட்டில் முயல்கள் பல இருந்தன.எதைக் கண்டாலும்
அவை அச்சத்தில் நடுங்கின. அன்றாடம் அஞ்சிஅஞ்சி
உயிர் வாழ்வதைவிட ஒரேயடியாக செத்துவிடுவது
சுகமென்று அவற்றுக்குத் தோன்றியது.எல்லா முயல்களும்
 ஓரிடத்தில் கூடின;மலை உச்சியை அடைந்து,அங்கிருந்து
 அடிவாரத்தில் உள்ள மடுவில் விழுந்து உயிரை
விடுவது என்று முடிவெடுத்தன.திட்டமிட்டபடி முயல்கள்
 அனைத்தும் மலையுச்சிக்கு வந்து சேர்ந்தன. மடுவில்
விழத் தயாராக நின்றன.

அந்த மடுவின் கரையில் இருந்த தவளைகள்
 மலையுச்சியில் இருக்கும் முயல்களைக்
கண்டதும் கலக்கமுற்று நீரில் பாய்ந்து மறைந்தன.
 தங்களைவிட அஞ்சி வாழும் உயிரினங்கள் உலகில்
 உண்டு என்ற உண்மையை அறிந்த முயல்கள், மடியும்
 முடிவை மாற்றிக் கொண்டன.

இந்த ஈசாப் கதை இன்னொரு நீதியையும்
வலியுறுத்துகிறது.உலகில் துன்பத்தைச் சுமப்பவர்கள் நாம்
மட்டும் இல்லை.நம்மைவிடமிக மோசமான துன்பத்தை
 அனுபவிப்பவர்கள் இந்த மண்ணில் உண்டு.

 அதனால், துன்பத்திலிருந்து விடுதலை தேடி
 யாரும் தற்கொலையில் ஈடுபடக்கூடாது.


எந்த நிலையிலும் எந்த உயிரினமும் மனிதரைப்
 போல் தற்கொலை செய்து கொள்வதில்லை.



1.02.2011

என்ன கொடுமை சரவணன் இது

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?


 *ஏங்க எங்கே போறீங்க?

*யார் கூட போறீங்க?

*ஏன் போறீங்க?
*எப்படி போறீங்க?
*என்ன கண்டுபிடிக்க போறீங்க?

*ஏன் நீங்க மட்டும் போறீங்க?
*நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

*நானும் உங்ககூட வரட்டுமா?
*எப்ப திரும்ப வருவீங்க?

*எங்கே சாப்பிடுவீங்க?
*எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

*இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
*இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

*பதில் சொல்லுங்க ஏன்?
*நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

*நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
*நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

*ஏன் பேசமா இருக்கீங்க?
*என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

*இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
*எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

*இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க???

நேயர் விருப்பம் - எங்கே என் ஜீவனே

படம்                         -  உயர்ந்த உள்ளம்
வருடம்                   -   1985
பாடியவர்கள்        -  கே.ஜே. யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை                       -   இளையராஜா



ஹாஆ ஹாஆ ஹாஆஆஆஆஆ ஆ
ஹாஆ ஹாஆ ஹாஆஆஆஆஆ ஆ

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம் இருந்தும்நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணைத் தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா  புதிய பாடம்

மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்


எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
காமபாணம் பாய்வதால்
காயம் ஆகுமே
காமபாணம் பாய்வதால்
காயம் ஆகுமே
கலசம் இங்கு கவசம் ஆகும்
காமன் அம்பு முறிந்து போகும்

மலர்ந்த தேகம் சிவந்து போகும்

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே