TamilNatpu


2.05.2011

நல்லா சொல்றீங்கப்பா டீடெய்லு

தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது
இன்றுதான் தெரிகிறது.

நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருந்ததால் திரு.பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராம்.

அப்படியானால் கையில் திரு.பொன்முடி நிறைய புத்தகம் வைத்திருந்தாரோ
உயர்கல்விதுறை அமைச்சர் ஆவதற்கு?

பாவம் திரு.தங்கம் தென்னரசு, கொஞ்சமாக வைத்திருந்தார் போலும் அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் ஆகிவிட்டார்.

சட்டைப் பையில் நிறைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததால் திரு.அன்பழகன் நிதி அமைச்சர் போலும்.

ஆமாம் திரு.ஆற்காடு வீராசாமி எதை வைத்திருந்தார் மின்துறையை பெறுவதற்கு.

திரு.கோசி.மணி பாவம் நிறைய கூட்டுறவு கடன் வைத்திருந்தார் போல,அதனால் கூட்டுறவு துறையை கொடுத்தார்கள்.இப்பொழுது கடனை செலுத்தியதாலும் வயதாகிவிட்டதாலும் முன்னால் படைவீரர் நலன். ஆனால் புள்ளிவிவரத்துறை ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை தேமுதிக கூட்டணி அமைந்து திமுக வென்றுவிட்டால் அருமையான அமைச்சர் கிடைத்துவிடுவார் புள்ளிவிவரத்துறைக்கு. நமது கேப்டனை அடித்துக்கொள்ள ஆள் இருக்கிறதா என்ன புள்ளிவிவரம் தருவதற்கு.

திரு.மு.க.ஸ்டாலின் மிசாவில் ”உள்ளே” இருந்ததால் உள்துறை அமைச்சர்.

திரு.வீரபாண்டி ஆறுமுகம் விவசாயம் நிறைய செய்வதால் விவசாயத்துறை அமைச்சர்.

திரு.துரைமுருகன் பெண்சிங்கம் திரைப்பட அனுமதிசீட்டை கூவிக் கூவி விற்று பொதுப்பணி ஆற்றியதால் பொதுப்பணித்துறை. சட்டத் துறை எப்படியோ?

திரு.கே.என். நேரு லால்குடிக்கும் திருச்சிக்கும் அடிக்கடி பேருந்தில் வந்ததால் போக்குவரத்து துறை அமைச்சர்.

திரு செல்வராஜ் காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் வனத்துறை.

திரு.பன்னீர்செல்வம் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால் சுகாதாரத்துறை.

திரு.பொங்கலூரார் நிறைய சிறு தொழில் நிறுவனங்கள் நடத்துவதால்

அடபோங்கப்பா நல்லா சொல்றீங்க டீடெய்லு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக