TamilNatpu


12.22.2010

மிகப் பிடித்த பாடல் வரிகள்- சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால்

பாடல் இடம் பெற்ற படம்     -   டூயட்
வெளியான வருடம்                 -  1994
பாடியவர்                                       -  பிரபு
இசை                                               - ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்                              - வைரமுத்து




சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால் எனது ரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி
இரு கண் இருந்தால் வாசித்து போடி
கண் பார்த்ததும் கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்
கண்டிப்பதால் என்னை நிந்திப்பதால்
நெஞ்சை தண்டிப்பதால்
தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன்
”உம்” என்று சொல் இல்லை ”நில்” என்று கொல்
என்னை ”வா” வென்று சொல் இல்லை ”போ”வென்று கொல்
”ம்” என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ ”இல்லை” என்றால் இடுகாடு பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக