நெட்டில் படித்தது,
மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் திரு.பில் கேட்ஸ் அவருடைய நிறுவனத்திற்கு புதிய நிர்வாகியைத் தேர்வு செய்வதற்கு ஒரு நேர்காணல் நடத்துகிறார். ஒரு பெரிய அறையில் 5000 இளைஞர்கள் நேர்காணலுக்காக அமர்ந்திருந்தனர். அவர்களில் நம் ராமசாமியும் ஒருவர்.
திரு. பில்கேட்ஸ் : தங்கள் வருகைக்கு நன்றி.
ஜாவா தெரியாதவர்கள் இந்த
அறையை விட்டு வெளியேறலாம்.
( 2000 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )
திரு.ராமசாமி : நமக்கும்தான் ஜாவா தெரியாது.
(தனக்குள்) இந்த அறையில்இருந்தால் என்ன
நஷ்டம் ஆக போகுது. இருந்துதான்
பார்ப்போமே.
திரு.பில்கேட்ஸ் : 100 இளைஞர்களை நிர்வாகிக்கும்
அனுபவம் இல்லாதவர்களும் இந்த
அறையை விட்டு வெளியேறலாம்.
( அடுத்த 2000 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )
திரு.ராமசாமி : நான்கூடத்தான் யாரயும்
(தனக்குள்) நிர்வாகிக்கவில்லை. இங்குஇருந்தால்
என்ன நஷ்டம் ஆக போகுது.
இருந்துதான் பார்ப்போமே.
திரு.பில்கேட்ஸ் : இளநிலை நிர்வாகவியல் பட்டயப்
படிப்பு இல்லாதவர்களும் இந்த
அறையை விட்டு வெளியேறலாம்.
( அடுத்த 500 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )
திரு.ராமசாமி : நாம 10 கூட தாண்டலை, இதுல
(தனக்குள்) எங்க இளநிலை நிர்வாகவியல்
பட்டயப் படிப்பு. என்னதான்
நடக்கும் நடக்கட்டுமே .
திரு.பில்கேட்ஸ் : இங்கு யாருக்கெல்லாம்
செர்போ-க்ராட் மொழி
தெரியாதோ அவர்களும்
வெளியேறலாம்.
( அடுத்த 498 இளைஞர்கள் வெளியேறுகின்றனர் )
திரு.ராமசாமி : நம்மளுக்கு தமிழே ஒழுங்கா தெரியாது.
(தனக்குள்) ஆங்கிலமும்அரைகுறை. இதுல
செர்போ-க்ராட் மொழியா எவன்யா
இதுலாம் கண்டுபிடிச்சான் என்று
எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்க்க
இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.
மற்ற அனைவரும் சென்று விட்டனர்,
திரு.பில்கேட்ஸ் : நல்லது உங்கள் இருவருக்கு
மட்டும்தான் செர்போ-க்ராட்
மொழி தெரியும் போல,
எனக்கும் தெரியாது. நீங்கள்
இருவரும் உரையாடுங்கள்.
நான் உங்கள்
உரையாடலைக் கேட்கிறேன்
திரு. ராமசாமி : எந்த ஊரு
(மெதுவாக
இன்னொருவர்
பக்கம் திரும்பி)
இன்னொருவர் : நமக்கு மதுரை பக்கம்.
தமிழேன்டாடாடாடாடாடா
soopero sooper
பதிலளிநீக்கு