தமிழக முதல்வர் திரு. கலைஞர் நாத்திகரா ஆஸ்திகரா?
நாத்திகர் என்றால் ஏன் தஞ்சை பெரிய கோவிலில் நுழைவாயில்
வழியாக நுழையாமல் மாற்று வழியில் வந்தார்.
இந்தி ஒழிப்பு போராட்டம் நடத்தியவரின் வாரிசுகள் இந்தி படித்த மர்மம்
என்ன?
கட்சி வேட்டி மட்டுமே அணிய வேண்டும் என்று மகனுக்கு சொன்னவர்
தஞ்சையில் பட்டு வேட்டியில் ஏன் வரவேண்டும்?
கோவையில் நடந்தது தமிழ் செம்மொழி மாநாடா அல்லது கட்சி
பொதுக்கூட்டமா?
இலவச தொலைக்காட்சி தந்தவர் ஏன் இலவச கேபிள் தரவில்லை?
அரசு கேபிள் அடக்கமாக செயல்படுகிறதா? அடக்கம் செய்யப்பட்டதா?
தமிழில் பெயர் மட்டும் வைத்தால் திரைப்படங்களுக்கு
கேளிக்கை வரி ரத்து செய்யபடுகிறதே இதனால் தமிழுக்கு ஏற்பட்ட
நன்மை என்ன?
108 அவசர ஊர்தி மத்திய அரசின் திட்டமா அல்லது
மாநில அரசின் திட்டமா?
திரைப்படம் வெளியிட்டால் மட்டும் திரு.ரஜினிகாந்த்
அரசியல் பேசும் மர்மம் என்ன?
வீணாகும் உணவு தானியங்களை வறுமைக்கோட்டிற்கு
கீழ் உள்ள மக்களுக்கு வழங்க முடியாது என நீதிமன்றத்தில்
சொன்ன திரு.மன்மோகன் சிங் அரசு கைபேசி இலவசமாக
தருவதாக சொல்வது ஏன்?
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக