TamilNatpu


10.08.2010

நல்ல சிந்தனைகள் (படித்ததில் பிடித்தது)

         ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்கு
         கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனாக இருக்கிறான் என்பதைப்
         பொறுத்தே அமைகிறது.

         ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக
         இருப்பினும் கோபத்தை அவன் அடக்காவிட்டால் முழுமையான
         துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.

         ஒருவனுடய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு கோபம்
          தணிந்தவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.

        கோபம் கொள்ளுதல் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற 
         பிரதிக்கிரியைய் என்றும் அது வாலிபப் பருவத்திலும்
         அதற்குப் பின்னும் தொடர்கிறது.

         தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும்
         காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.

         ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக
         இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற
         முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.
              
      
            

     எனது சிந்தனைகள் அல்ல. என்றோ எதிலோ படித்தது.

     உரிமையாளர் மன்னிக்கவும்.


 

2 கருத்துகள்:

  1. நல்ல விஷயங்கள் தான் முக்கியம்...அதனை எங்கிருந்து எடுத்து தந்தால் என்ன, நண்பரே !

    பதிலளிநீக்கு
  2. நல்ல விஷயங்கள் தான் முக்கியம்...அதனை எங்கிருந்து எடுத்து தந்தால் என்ன, நண்பரே !

    பதிலளிநீக்கு