தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்றெல்லாம் பாராட்டப்பட்ட தமிழனின் இன்றைய நிலை என்ன?
- தொப்பூள் கொடி சொந்தங்கள் கருவருக்கப்பட்டாலும்
வாய் மூடி மெளனவிரதம் இருப்பதேன்.
- கொன்று குவித்த இராட்சசனுக்கு நம் நாட்டிலே
விருந்தினராக சிவப்பு கம்பள வரவேற்பு.
- தமிழனுடைய போர்குணம் எங்கே போயிற்று,
ஒருவேளை மானாட மயிலாட பார்த்து
குறைந்து விட்டதோ
- தமிழ் நாட்டில் தொப்பூள் கொடி சொந்தங்கள் பற்றி
பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமாம்
- நாம் வாழ்வது ஜன நாயக நாடா
அல்லது மன்னராட்சியா
- பேசுவதற்கும் உரிமை இல்லையா
- மீறீப் பேசும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர்
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது இந்தி எதிர்ப்பு
போராட்டம் நடத்தியவர் எடுத்த நடவடிக்கை
- இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏன் பாய வில்லை.
- ஆளும் கட்சிக்கு கூட்டணியைப் பாதுகாக்கும் கவலை
எதிர் கட்சிக்கோ அங்கு இருப்பவர் அனைவரும்
பொடியன்கள்.
- தமிழா எப்பொழுது அங்கே அழும் உன் சகோதரனின்
அழுகுரல் மானாட மயிலாட நிகழ்ச்சியை தாண்டி
உன் காதில் விழும்.
- திபெத்திய அகதிகளுக்கு வெண்ணெய் தரும் மத்திய
அரசு தமிழ் அகதிகளுக்கு சுண்ணாம்பு தருவது ஏன்
- உலகத் தமிழின ஒரே தலைவருக்கு பேரன்களுக்கு
விரும்பிய துறை வாங்க டெல்லி செல்ல நேரம்
ஒதுக்க முடிந்தது.
அகதி தமிழனுக்குகாக கடிதம் எழுதுகிறார்.கடிதம்
போய் சேர்கின்றதோ இல்லையோ ஆண்டவனுக்கும்
ஆளுகிறவருக்குமே வெளிச்சம்
- எம் சொந்தங்களே தயை கூர்ந்து மன்னித்தருளுங்கள்.
யாரேனும் இன்னும் மிச்சமிருந்தால்.
எம்மால் முடிந்ததும் இந்த பதிவு மட்டும்தான்.
எவன் எங்கு செத்தால் எங்களுக்கென்ன
ஏனென்றால் எங்களுக்கு “எந்திரன்” வந்துவிட்டது. அது
இல்லை என்றால் மட்டைபந்து விளையாட்டு இருக்கிறது,
அதுமில்லை என்றால் மானாட மயிலாட இருக்கிறது.
தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக