படம் : பாண்டவர் பூமி
வருடம் : 2001
பாடல் : சிநேகன்
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : யோகேந்திரன்,சித்ரா சிவராமன்
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
ஒன்ன நான் புரிஞ்சிக்கனும்
ஒன்ணொன்னா தெரிஞ்சிக்கனும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா
காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியைக் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறியபின் சொல்லிய உண்மை
நீயும் நானும் பழகுறொமே காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
தனனன தானானானா
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலே காதலைச் சொல்லுமடி
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே
பிரிந்துபோன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
ஆங் இது கரெக்ட்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாய்ஞ்சிக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
உன்ன நான் புரிஞ்சிக்கனும்
ஒன்ணொன்னா தெரிஞ்சிக்கனும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹுஹூஹூம்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹுஹூஹூம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக