"நாட்டில், 2011ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும், 15 ஆயிரத்து 422 பேர் இறந்துள்ளனர்' என, தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கில், இந்த மையம் சார்பில், வெளியிடப்பட்ட
அறிக்கை: நாட்டில், 2011ம் ஆண்டில், 4.40 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 1.36 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக, 65 ஆயிரத்து 873 விபத்துகளும், மகாராஷ்டிராவில், 47 ஆயிரத்து 120, கர்நாடகாவில், 44 ஆயிரத்து 696, ஆந்திராவில், 41 ஆயிரத்து 66 விபத்துகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் நடந்த விபத்துகளில், 15 ஆயிரத்து 158 பேரும், உ.பி.,யில், 14 ஆயிரத்து 996, மகாராஷ்டிராவில், 13 ஆயிரத்து 680 பேரும் இறந்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில், டில்லி முதலிடம் வகிக்கிறது. இங்கு நடந்த, 7,280 சாலை விபத்துகளில், 2,107பேர் பலியாகியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், லட்சத் தீவுகளில், எந்த சாலை விபத்துகளும், இறப்புக்களும் நிகழவில்லை. நாகாலாந்தில், மிகக் குறைவாக, 32 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில், 36 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் நடந்த சாலை விபத்துகளில், 13 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஐந்து கோடி பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக