ஒரு நாட்டின் அரசனுக்கு இரண்டு அழகிய கழுகுகள்
பரிசாக வந்தன. அவை அந்த அரசனின் வாழ்நாட்களில்
பார்த்திராத அழகுடன் இருந்தன.அவைகளின் மேல்
மிகப் பாசம் வைத்த அரசன், பறவை நிபுணரை அளித்து
பழக்கச் சொன்னார்.
சில மாதங்களுக்குப் பிறகு வந்த பறவை நிபுணர்
அரசன் அளித்த பறவைகளில் ஒன்று மிக அழகாக
மிக உயரத்தில் வானத்தில் பறப்பதாகவும் , மற்றொரு
பறவை வந்த நாளிலிருந்து அது அமர்ந்த மரத்தின்
கிளையை விட்டு நகர மறுப்பதாகவும் கூறினார்.
அந்த அரசன் நாட்டிலிருந்த அனைத்து பறவை
நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அனைவரும் தங்களால் முடிந்த அனைத்து
முயற்சிகளையும் செய்தனர். ஆனால் ஒன்றும்
வெற்றி அடையவில்லை.
அரசன் தன்னுடய அமைச்சரவையை கூட்டி
ஆலோசனை நடத்தினார். அவர்களாலும் அதை
பறக்கச் செய்ய முடியவில்லை.
முடிவாக நாட்டு மக்களிடம் தண்டோரா
மூலம் அறிவிக்கச் சொன்னார்,அந்தப் பறவையை
பறக்க வைப்பவருக்கு பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
பலரும் பலவிதமாக முயன்றும் ஒன்றும்
வெற்றி அடையவில்லை.
முடிவாக ஒரு நாள் அந்த அரசன் சாளரம்
வழியாக பார்த்த போது அந்த பறவை
பறந்து கொண்டிருப்பதை கண்டு மிகவும்
மகிழ்ச்சி அடைந்து,
அதைப் பறக்க வைத்தவரை அரசவைக்கு
அழைத்து வரச் சொன்னான்.
அரசவையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது
வந்தவரோ மிக சாதாரண விறகுவெட்டி.
அரசன் விறகுவெட்டியிடம் எவ்வாறு பறக்க
வைத்தீர்கள் என்று கேட்டதுக்கு, அவரோ மிகச்
சாதாரணமாக ஒன்றுமில்லை அரசே,
அந்தப் பறவை அமர்ந்திருந்த மரக்கிளையை
வெட்டினேன் என்றார்.
எங்கே நீதி என்று தேடுகிறீர்களா, இதோ
மனிதர்களாகிய நாமும் அந்தப் பறவையைப்
போல்தான் பறக்கும் திறமை அனைவருக்கும்
இருந்தும் மரக்கிளையை விட்டு வெளியேற
மறுக்கிறோம். வானமே வசப்படக் காத்திருந்தும்
மரக்கிளையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
பலவிதமான வாய்ப்புகள் நம்முன் கொட்டிக்கிடந்தாலும்
இருப்பது போதும் என்று இலவசத்திற்கு
அலைந்து கொண்டிருக்கிறோம்.
பி.கு
இந்தப் பதிவிற்கும் வரவிருக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வழக்கம்போல் வசூல்களை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதற்கு முன் சில நிமிடங்கள் யோசித்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது,
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக